India
200-க்கு 212 : குஜராத் பள்ளியில் மாணவி பெற்ற மதிப்பெண்ணால் ஷாக் - கேள்விக்குறியாகும் கல்வியின் தரம்!
குஜராத்தின் தாஹோட் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியில் இருக்கும் பல்வேறு மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த சூழலில் இங்கு அண்மையில் தொடக்கநிலை மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்ற நிலையில், ஒரு மாணவியின் மதிப்பு அனைவர் மத்தியிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த பள்ளியில் வன்ஷிபன் மணிஷ்பாய் (Vanshiben Manishbhai) என்ற மாணவி 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சூழலில் அண்மையில் இவருக்கு 6 பாடங்களுக்கு 1000 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெற்றது. 2 பாடங்களுக்கு 100 மற்ற 4 பாடங்களுக்கு 200 என்று மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் இந்த மாணவி மொத்தம் 956 மதிப்பெண் பெற்றார்.
குறிப்பாக 2 பாடங்களில் 200-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றதாக அவரது மதிப்பெண் அட்டையில் குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில மொழிப் பாடமாக குஜராத்தியில் 200-க்கு 211 என்றும், கணிதம் பாடத்தில் 200-க்கு 212 என்றும் மதிப்பெண் பெற்றுள்ளார். இதையடுத்து இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அந்த மதிப்பெண் தவறாக இடம்பெற்றுள்ளதாகவும், மாணவி குஜராத்தியில் 191 என்றும், கணிதத்தில் 190 என்றும் மதிப்பெண் பெற்றுள்ளதாகவும், அவர் 1000-க்கு 934 மதிப்பெண்ணு பெற்றுள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும் தவறாக வெளியான மதிப்பெண் விவரம் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விசாரிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே நீட் தேர்வு மோசடி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக ஆளும் குஜராத்தில் அதுவும் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியின் மதிப்பெண்ணில் குளறுபடி ஏற்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!