India
”பாஜக கூட்டணிக்கு ஓட்டுபோடுங்க” : மணிப்பூரில் அட்டூழியம் - வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்!
7 கட்டமாக நடைபெறும் 18 ஆவது மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் ஏப். 19 ஆம் தேதி நிறைவடைந்ததை அடுத்து இன்று 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் முதல்கட்ட தேர்தலின் போது உள்மணிப்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து இன்று இரண்டாம் கட்டமாக வெளி மணிப்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காமல் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடும் நாகா மக்கள் முன்னணி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களை மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்கட்ட வாக்குப்பதிவின் போதும் பல வாக்குச்சாவடிகளில் வன்முறை வெடித்தது. இதனால் 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போது பொதுமக்களை இந்த கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என பகீரங்கமாக மிரட்டியுள்ளது மக்களின் வாக்குரிமையையே சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதையடுத்து மணிப்பூரில் வாக்காளர்களை மிரட்டும் வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்து ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !