India
பிரதமர் மோடிக்கு 2 நாக்குகள் : நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம்!
ஒரு நாட்டின் பிரதமர் என்று கூட பாராமல் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார். ”காங்கிரஸ் ஆட்சி அமைத்தப்போது, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உள்ளது என்று கூறினார்கள்.
தாய்மார்கள், சகோதரிகள் ஆகியோரிடம் இருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, பின்னர் மன்மோகன் சிங் அரசு சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னதைப்போல, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இப்போது சொல்கிறது. அர்பன் நக்சல்கள் உங்களது தாலியை கூட விடமாட்டார்கள்” என்று வெறுப்பை விதைத்துள்ளார்.
மோடியின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு 2 நாக்குகள் உள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.
இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த நடிகர் பிரகாஷ் ராஜ் ”10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமராக இருந்தவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசிய பேச்சை திரித்து அதை இஸ்லாமியர்கள் என மோடி பேசும்போதே அவரின் திட்டம் நமக்கு தெரிகிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் போதும், கர்நாடகாவில் இருக்கும் போது மோடி இப்படி பேச மாட்டார். அங்கு இவரது பருப்பு வேகாது. ஆனால் வடமாநிலங்களில் இப்படி பேசுவார். ஒரு நாளைக்கு 5 வேடம் போடுகிற மாதிரி ஒரே நாடு ஒரே மொழி என பேசும் மோடிக்கு 2 நாக்குகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொறு கருத்துக்களை பேசுகிறது. இவை எல்லாம் நாம் தலைகுனிய வேண்டிய அசிங்கமான விஷயம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!