India
”ஏழைகளுக்கும் 25 பெரு முதலாளிகளுக்கும் இடையிலான போர் இந்த தேர்தல்” : ராகுல் காந்தி பேச்சு!
இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்.19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் ராஜ்தானின் பிகானேரில் நடைபெற்ற பிரச்சார பேரணியில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, "தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரும் தொழிலதிபர்களிடம் இருந்து பணத்தை ஒன்றிய பா.ஜ.க அரசு பெற்றுள்ளது. இந்த தேர்தல் நாட்டின் ஏழைகளுக்கும் 25 பெரு முதலாளிகளுக்கும் இடையிலான போர்.
விவசாயிகள் எங்களுக்கு (MSP) குறைந்தபட்ச ஆதரவு விலையைக் கேட்கிறார்கள், இளைஞர்கள் வேலையை கேட்கிறார்கள், பெண்கள் விலைவாசி உயர்விலிருந்து காப்பாற்றக் கேட்கின்றனர். ஆனால் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க இதுபற்றி கண்டுகொள்வதே இல்லை.
நாட்டில் இரண்டு பெரிய பிரச்சனை வேலையின்மை மற்றும் பணவீக்கம் ஆகும். இது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்புவது இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். 20 தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்ததில் 24 ஆண்டுகளுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதியம் கொடுத்து இருக்க முடியும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!