India
புலம்பெயர் தொழிலாளிகளின் இயலாமையை பயன்படுத்திக்கொள்ளும் பா.ஜ.க!
வாக்களித்தால் ஊதியம் இல்லை; ஊதியமில்லை என்றால் உணவில்லை.
வாக்களிக்காமல் இருந்தால் உரிமை இல்லை; உரிமை இல்லை என்றால் வேலையே இல்லை.
இரு வேறு காரணங்களால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி வரும் புலம்பெயர் தொழிலாளிகள்.
இந்தியா என்கிற மக்களாட்சி நாட்டில், அனைவரும் வாக்களிக்க வேண்டும். தங்களது ஜனநாயக உரிமையை தடையில்லாமல் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு தேர்தலின் போதும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் பிரச்சாரங்கள் மேற்கொள்வது அறிந்ததே.
எனினும், ஜனநாயக கடமையாற்றுவதற்கும், அண்மையில் ஒரு தகுதி வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, புலம்பெயர் தொழிலாளிகளுக்கு, அந்த தகுதி தொடர்ந்து மறுக்கப்படும் சூழலும் அதிகரித்து வருகிறது.
காரணம், பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களை பிறப்பிடமாகவும், வாக்குரிமை கொண்ட இடமாகவும் கொண்டுள்ள மக்கள் புலம்பெயர்ந்து தென் மாநிலங்களுக்கு பணிபுரிய செல்வதால்,
தேர்தலின் போது தங்களது வாக்குகளைப் பதிய, சுமார் 1000 கி.மீட்டர்களை கடந்து செல்ல வேண்டியதாக இருக்கிறது. நாள் கூலி பெறுவோர், ஊதியத்தை துறந்து வர வேண்டிய நிலை உள்ளது.
எனினும், இத்தகைய சிக்கல் உள்ளதே என்று, புலம்பெயர்ந்து பணிபுரியும் தொழிலாளர்கள் வாக்களிக்க தவறினால், அது நாட்டிற்கே கேடாகவும் அமைந்து விடுகிறது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கூட, சுமார் 30 கோடி மக்கள், புலம்பெயர்ந்து பணிபுரியும் ஒற்றைக் காரணத்திற்காக வாக்களிக்க தவறியதால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்து, இருக்கின்ற வேலைவாய்ப்புகளையே அழித்து வருகிறது.
இது எவ்வாறு பா.ஜ.க.விற்கு ஆதரவாக அமைந்தது என்றால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க பல இடங்களில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளது.
அவையும் குறிப்பாக, பா.ஜ.க ஆட்சிபுரியும் உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளது பா.ஜ.க.
ஒருவேளை, புலம்பெயர் தொழிலாளிகள் வாக்களித்திருந்தால், பா.ஜ.க.வின் ஆட்சியே கவிழ்ந்து கூட இருக்கும்.
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாகியும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படாமல் இருக்க, பா.ஜ.க.விற்கு சாதகமான இந்நடைமுறையும் ஒரு காரணமாய் அமைந்துள்ளது.
இந்நிலையில், ஜனநாயக உரிமை நிலைக்குமா அல்லது கைநழுவி போகுமா என்ற கேள்விக்கு, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் வழியே விடை கிடைக்கும்.
அதற்கான, பெரும் பங்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் கையில் தான் உள்ளது என்பதும் தெளிவுபட்டிருக்கிறது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!