India

மணிப்பூரில் மத கலவரத்தை ஏற்படுத்த பாஜக சதி: ஆளுநர் மூலம் வெளியான அறிவிப்பு- கிறிஸ்தவ அமைப்புகள் கண்டனம் !

மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்தது.இந்த வன்முறையில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு கடந்த ஆண்டு மே 3 மாதம், மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகினர். மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு பின்னர் அங்கு இணையம் மீண்டும் வழங்கப்பட்டபோது சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே உறையவைத்தது.

அதன் பின்னரும் அங்கு பல்வேறு இடங்களில் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது. பல இடங்களில் இரு தரப்புக்கும் மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. இந்த கலவரங்களுக்கு பாஜக அரசே காரணம் என அந்த கட்சியை சேர்ந்த பல தலைவர்களும் பகிரங்கமாக விமர்சித்திருந்தனர். இவ்வளவு கலவரம் ஏற்படும் பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Manipur Governor

இந்த நிலையில், சாதி கலவரத்தைத் தொடர்ந்து மணிப்பூரில் மத கலவரத்தை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் 41 சதவீத மக்கள் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். அங்கு கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகை நாளான ஈஸ்டர் பண்டிகை அன்று அரசு விடுமுறை வழங்கப்படுவது வழக்கமாக இருந்துள்ளது.

ஆனால், இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை அன்று விடுமுறை வழங்கப்படாது என்றும், அன்றைய தினம் வேலைநாளாக செயல்படும் என்றும் மாநில அரசு சார்பில் ஆளுநர் அனுசுயா அறிவித்துள்ளார். இவரது அறிவிப்புக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், மணிப்பூரை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் இந்த உத்தரவை திரும்பப்பெறுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: தேர்தல் விதிமுறைகளை மீறி நேரடியாக பணப்பட்டுவாடா செய்த அதிமுக : இணையத்தில் வைரலாகும் வீடியோ!