India

பா.ஜ.கவுக்கு ரூ.150 கோடி நன்கொடை : அரசு ஒப்பந்தம் பெற்று லாபமடைந்த பார்தி ஏர்டெல் நிறுவனம்!

ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரம் திட்டத்தை அண்மையில் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் SBI வங்கி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் தேர்தல் ஆணையம் அதன் விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

அதன்படி தேர்தல் பத்திர விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பா.ஜ.க ரூ.6060 கோடி நன்கொடை பெற்றுள்ளது தெரியவந்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுத்த நிதி விவரங்கள் பட்டியலையும் உச்சநீதிமன்றத்தின் அழுத்தத்தை அடுத்து SBI வெளியிட்டது.

இதையடுத்து தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க செய்த மிகப்பெரிய ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது. ED,IT,CBI போன்ற அமைப்புகளை வைத்து 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களி மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க நன்கொடை பெற்றுள்ளது.

அதேபோல் நன்கொடை பெற்ற நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் காலாவதியான தேர்தல் நன்கொடை பாத்திரங்களைப் பணமாக்க நிதி அமைச்சகம் பாஜகவுக்கு உதவியது அம்பலமானது. இதன் மூலும் ரூ.10 கோடி வரை பா.ஜ.கவும் நிதி கிடைத்துள்ளது.

இந்நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் பா.ஜ.கவுக்கு ரூ.150 கோடி நன்கொடை வழங்கியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி பார்தி ஏர்டெல் நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.கவுக்கு ரூ.100 கோடிக்கு நிதி அளித்துள்ளது.

மேலும் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி ஏர்டல் நிறுவனம் மேலும் ரூ.50 கோடி தேர்தல் பத்திரங்களை வாங்கி பா.ஜ.கவுக்கு அளித்துள்ளது. இதன் மூலம் OneWeb நிறுவனம் செயற்கைக்கோள் அலைக்கற்றை உரிமத்தை பார்தி ஏர்டெல் நிறுவனம் பெற்றுள்ளது.

Also Read: ”மதத்தை மட்டும் வைத்து அரசியல் செய்து வரும் மோடி” : கனிமொழி MP விமர்சனம்!