India
”வேலையின்மை பிரச்சனையை பா.ஜ.க அரசால் தீர்க்க முடியாது” : ஒன்றிய அரசின் பொருளாதார ஆலோசகர் பேச்சு!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என கூறி ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. ஆனால் 10 ஆண்டுகால ஆட்சியில் அவர்கள் இளைஞர்களுக்காகக் கொடுத்த வாக்குறுதியில் 10%ம் கூட நிறைவேற்றவில்லை.
வீதிக்கு வீதி வேலை இல்லாமல் இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் எதிர்காலமாக இருக்கும் இளைஞர்களைப் பற்றி ஒன்றிய பா.ஜ.க அரசுக்குக் கொஞ்சம் கூட அக்கறை இல்லை என எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில், வேலையின்மை பிரச்சனையை அரசால் தீர்க்க முடியாது என ஒன்றிய அரசின் பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன் கூறியுள்ளார். இதையடுத்து பிரதமர் மோடியின் வேலை வாய்ப்பு குறித்த பொய் பேச்சுகள் அம்பலமாகியுள்ளது.
டெல்லியில் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய இந்தியா வேலைவாய்ப்பு 2024 ஆய்வு அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ஆனந்த் நாகேஸ்வரன், "வேலைவாய்ப்பு பிரச்சனையில் ஒன்றிய அரசால் மட்டுமே முழுமையாகச் சரி செய்ய முடியாது. கார்ப்ரேட் நிறுவனங்கள் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.தொழிலாளர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் உள்ளது. மேலும் பெண் தொழிலாளர்கள் மீதான பாரபட்சம் தொடர்ந்து வருகிறது" என பேசியுள்ளார்.
Also Read
-
நடமாடும் மருத்துவ சேவை : இதிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!
-
”சிஎஸ்கே-வில் மீண்டும் ரெய்னா, பிராவோ, முரளி விஜய்... களைகட்டப்போகும் சேப்பாக்கம்” - முழு விவரம்!
-
“பழனிசாமி ஒரு நன்றிகெட்ட அரசியல்வாதி” : ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு!
-
“சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வாஷ்அவுட் ஆகும்” - எல்.கே. சுதீஷ் எம்.பி பேட்டி!
-
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு.. அதிமுக ஆட்சி ஊழல் நாற்றம் எடுத்த ஆட்சி: முரசொலி கடும் தாக்கு!