India

”ED IT CBI அமைப்புகளை வைத்து வசூல் பாய் வேலை செய்யும் நாட்டின் பிரதமர்” : ராகுல் காந்தி MP குற்றச்சாட்டு

ஒன்றிய பா.ஜ.க அரசு ED,CBI மற்றும் IT போன்ற விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களை மிரட்டி வருகிறது. அம்மாநிலங்களில் அமைச்சர்கள் மீது போலியான வழக்குகள் மூலம் ஆட்சியை கவிழ்க்கும் சதித்திட்டங்களைத் தீட்டி வருகிறது.

இதேபோன்று ED, CBI மற்றும் IT போன்ற விசாரணை அமைப்புகளைவைத்து பெரிய பெரிய நிறுவனங்களிடம் இருந்து பா.ஜ.க நன்கொடை பெற்று வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில், ED உள்ளிட்ட அமைப்புகளை வைத்து பிரதமர் நரேந்திர மோடி நன்கொடை வியாபாரம் நடத்தி வருவதாக ராகுல் காந்தி எம்.பி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவரது x சமூகவலைதள பதிவில், " பிரதமரின் ஜாமீன் மற்றும் நன்கொடை வியாபாரம் திட்டம் பற்றித் தெரியுமா?. ED, CBI மற்றும் IT போன்ற விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி வசூல் பாய் போல் நன்கொடை வியாபாரம் செய்து வருகிறார் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி.

விசாரணை அமைப்புகள் நடத்திய 30 நிறுவனங்கள் பா.ஜ.க கட்சிக்கு ரூ.335 கோடி நிதியை நன்கொடையாக அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பத்திரத்தின் மூலம் பா.ஜ.க-விற்கு நிதி வழங்கினால் சட்டவிரோத தொழில்களுக்கு கூட அங்கீகாரம் கொடுக்கிறது மோடியின் அரசு" என தெரிவித்துள்ளார்.

Also Read: 30 நிறுவனங்கள் - ரூ.335 கோடி நன்கொடை : பா.ஜ.கவின் முகத்திரையை கிழித்த காங்கிரஸ்!