India

”கேரளாவில் பிரதமர் படங்களை வைக்க முடியாது” : முதலமைச்சர் பினராயி விஜயன் அதிரடி!

ஒன்றிய பா.ஜ.க அரசு எதிர்க்கட்சி மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அழுத்தம் கொடுத்து வரும் அதேநேரம் தற்போது ஒன்றிய அரசின் திட்டங்களில் பிரதமர் மோடியின் படங்களை வைக்க வேண்டும், இந்தியில் திட்டத்திற்குப் பெயர் வைக்க வேண்டும் இல்லை என்றால் நிதி ஒதுக்கப்படாது என எதிர்க்கட்சிகளின் மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

நடந்து முடிந்த ஒன்றிய அரசின் இறுதி இடைக்கால பட்ஜெட்டில் கூட தென் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு குறைந்த நிதியையே ஒதுக்கியது. இதைக் கண்டித்து கேரளா, கர்நாடகா , தமிழ்நாடு அரசுகள் டெல்லியில் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் மீண்டும் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என கேரள அரசுக்கு ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான விவாதம் கேரள சட்டமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளின் முன்பு பிரதமர் மோடியின் பதாகைகளை வைக்க முடியாது.இது ஒரு தேர்தல் யுக்தி. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கேரள அரசு புகார் தெரிவிக்கும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: பாசிச பாஜகவுடன் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு அதிமுக செய்த துரோகங்கள் : வரலாறை திரும்பி பார்ப்போம்!