India
செம்மரக்கடத்தல் : தடுக்க முயன்ற காவலரை கார் ஏற்றி கொன்ற கடத்தல்காரர்கள்... ஆந்திராவில் பரபரப்பு !
ஆந்திர மாநிலத்தில் உள்ள சில காட்டுப்பகுதிகளில் இருந்து சந்தன மரங்கள் கடத்துவதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகிறது. இதனை தடுப்பதற்காக அம்மாநில சிறப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் தினமும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சம்பவத்தன்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அன்னமய மாவட்டம் கே.வி.பள்ளி மண்டலம் குன்றேவாரி பள்ளி சந்திப்பு அருகே வனப்பகுதியில் இருந்து வேகமாக வந்துள்ளது. இதனால் அங்கிருந்த போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் அந்த காரை ஓட்டி வந்த நபர், நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். மேலும் இடைமறித்த கணேஷ் (30) என்ற காவலர் மீதும் காரை ஏற்றி சென்றுள்ளார்.
இந்த கோர சம்பவத்தில் காவலர் கணேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். தொடர்ந்து அவரது உடலை மீட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, வேகமாக சென்ற காரையும் துரத்தி சென்றனர். அப்போது அந்த காரை ஓட்டி தப்பி செல்ல முயன்ற 3 பேரில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரித்ததில், அவர்கள் சந்தன மரம் கடத்தி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் காரில் இருந்து 7 சந்தன மரக்கட்டைகளும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தப்பியோடிய மீதம் ஒரு நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!