India
”ஜார்க்கண்ட் அரசை சீர்குலைக்க பார்க்கும் பா.ஜ.க” : ராகுல் காந்தி MP குற்றச்சாட்டு!
மணிப்பூர் முதல் மும்பை வரை இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி,. மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை அசாம், மேற்குவங்க மாநிலங்களை கடந்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நேற்று வந்தது.
அப்போது ஜார்க்கண்ட் மாநிலத்திற்குள் நுழைந்த ராகுல் காந்தியின் யாத்திரையை புதிய முதலமைச்சர் சம்பாய் சோரன் வரவேற்றார். பின்னர் பேசிய ராகுல் காந்தி எம்.பி," மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்க்கண்ட் அரசை பா.ஜ.க சீர்குலைக்க பார்த்தது. இதை இந்தியா கூட்டணி தடுத்து நிறுத்தியது.
பா.ஜ.க பண பலத்தையும் விசாரணை அமைப்புகளையும் பயன்படுத்தி மிரட்டுகிறது. ஆனால் பா.ஜ.கவை கண்டு காங்கிரஸ் கட்சியும் நானும் பயப்பட மாட்டோம். பா.ஜ.கவின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்திற்கு எதிராகப் போராடுவோம்.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் என நாடு முழுவதும் ஒன்றிய பா.ஜ.க அரசால் அநீதி நிலவுகிறது. பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுகிறார். ஆனால் அவர் மக்களின் குரல்களைத்தான் கேட்ட மறுக்கிறார்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!