India
மகள், காதலனை கொன்ற தந்தை : பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலத்தில் நடந்த ஆணவக் கொலை!
உத்தரப் பிரதேசம் பரோலி கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின். இளைஞரான இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த நீத்து என்ற பெண்ணை 2 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதல் குறித்து இரு வீட்டாருக்கும் தெரிந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்களது காதலை பிரிக்கப் பல முறை முயற்சி செய்தும் முடியவில்லை. இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலே காதலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் செவ்வாய் அன்று அதிகாலை, நீத்துவும் சச்சினும் வீட்டிற்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வெளியே வந்த நீத்துவின் தந்தை இவர்களைப் பார்த்து சத்தம் போட்டுள்ளார்.
பிறகு வீட்டிலிருந்து வெளியே வந்த அனைவரும் காதலர்கள் இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளது. அப்போது ஆத்திரத்தில் வீட்டிலிருந்த மண்வெட்டியை எடுத்து காதலர்கள் இருவரையும் நீத்துவின் தந்தை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே காதலர்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து நீத்துவின் தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த ஆணவக்கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் காதலர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!