India
பெற்றோர்களே உஷார் - குழந்தையின் மூக்கை கடித்த எலி : பிறந்து 40 நாட்களிலேயே நடந்த கொடூர துயரம்!
தெலங்கானா மாநிலம் நாகனூல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி கலா. இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த தம்பதிக்குக் கடந்த 40 நாட்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து குழந்தையுடன் கலா தனது தாய்வீட்டில் இருந்துள்ளார். அப்போது குழந்தையின் மூக்கில் எலி ஒன்று கடித்துள்ளது.
இதையடுத்து குழந்தையை அருகே இருந்த மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்குக் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் குழந்தையை எலி கடித்துள்ளது. இதனால் அவரது மூக்கிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டே இருந்துள்ளது. பின்னர் உடனே ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தைக்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது!” : சட்டப்பேரவையில் மரிய வில்சன் சர்ச்சை பேச்சு!
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!