India
கைகூப்பி வணங்காததால் ஆத்திரம் : தலித் முதியவரை கட்டி வைத்து தாக்கிய கும்பல்.. ம.பி-யில் அதிர்ச்சி !
பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்னர் பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகி ஒருவர் மதுபோதையில் சிறுநீர் கழித்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ சமீபத்தில் வைரலான நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவரை விடுதலை செய்யவேண்டும் என பிராமண சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுனர்.
அதன்பின்னர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞரின் காதில் ஒருவர் சிறுநீர் கழித்துள்ள வீடியோவும், உ.பியில் தலித் இளைஞர் மீது மலம் பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் கை கூப்பி வணங்காத தலித் முதியவரை உயர் சாதி என்று கூறிக்கொள்ளும் கும்பல் கட்டி வைத்து அடித்துத் துன்புறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் உடைப்பிரா என்ற கிராமத்தில் நாதுராம் அஹிர்வார் என்ற பாதியில் சமூகத்தை சேர்ந்த முதியவர் வசித்து வந்துள்ளார். அவர் தனது கிராமத்தில் இருந்த ரேஷன் கடைக்கு சென்று வீடு திருப்பியுள்ளார். அப்போது அவரின் எதிரே உயர் சாதி என சொல்லிக்கொள்ளும் அகிலேஷ் துபே மற்றும் ராம்ஜி பாண்டே ஆகியோர் வந்துள்ளனர்.
அப்போது அந்த முதியவரை மறித்த அந்த இருவரும் தங்களை கை கூப்பி வணங்கவில்லை என்று கூறி அங்கிருந்த கம்பத்தில் கட்டிவைத்து சுமார் 3 மணி நேரம் தாக்கியுள்ளனர். மேலும் அவரை சாதி ரீதியாகவும் இழிவாக பேசியுள்ளனர்.
பின்னர் தனக்கு நடந்த இந்த கொடுமை குறித்து முதியவர் நாதுராம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலிஸார் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!