India
நாடாளுமன்றத்தில் இருந்து 92 MPக்கள் சஸ்பெண்ட் : எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்கும் ஒன்றிய அரசு!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த டிச.13ம் தேதி வழக்கம் போல் மக்களவை தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது பார்வையாளர்கள் மாடத்திலிருந்து 2 மர்ம நபர்கள் அரங்கிற்குள் குதித்து புகை குண்டுகளை வீசினர். இதனால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் மக்களவை வெளியேயும் பெண்ட உட்பட 2 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நான்கு பேரையும் போலிஸார் பிடித்து கைது செய்தனர். இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் கொடுக்க வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்குப் பதில் அளிக்க மறுத்து கேள்வி கேட்டும் எதிர்க்கட்சி எம்.பிக்களை ஒன்றிய அரசு சஸ்பெண்ட் செய்து வருகிறது.
கடந்த டிச.15ம் தேதிதான் கேள்வி எழுப்பிய கனிமொழி, ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர், சு.வெங்கசேடன், பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தற்போது இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் மக்களவை கூடியது.
இன்றும் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் நாடாளுமுன்றத்தில் நடந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து தி.மு.கவை சேர்ந்த டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதிமாறன், செல்வம், சி.என்.அண்ணாதுரை, தமிழச்சி தங்கபாண்டியன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், கலாநிதி வீராசாமி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதோடு இன்று மட்டும் மக்களவையில் 46 எதிர்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.அதேபோல் மாநிலங்களவையில் இருந்தும் 46 எம்.பிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கூட்டத் தொடரில் மட்டும் 92 எதிர்க்கட்சி எம்பிக்கள் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசின் இத்தகைய அராஜக நடவடிக்கைக்கு இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
Also Read
-
“Climate Action, Clean Energy ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!