India
மருத்துவத்தை அழிக்கும் பாஜக - காவிமயமாகும் தேசிய மருத்துவ ஆணையம் : வலுக்கும் கடும் எதிர்ப்புகள்!
பா.ஜ.க ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே கல்வியில் காவி மயத்தை எப்படியாவது புகுத்த வேண்டும் என திட்டத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் அவரை பாடத்திட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை நுழைத்து வருகிறது. தங்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் இதை எளிதாக செய்து வருகிறது பா.ஜ.க அரசு.
ஆனால் எதிர்க்கட்சி மாநிலங்களில் இப்படி எளிதாகச் செய்ய முடியவில்லை. இதனால் நேரடியாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிலையங்களில் தங்களது தந்திர வேலைகளைச் செய்து வருகிறது. மருத்துவத் துறையை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும். ஆனால் பா.ஜ.க மருத்துவத் துறையை அறிவியலுக்கு புறம்பாக தங்களது மனுஸ்மிருதி படி அணுகுகிறது..
கொரோனா காலத்தில் கூட உலகமே இதற்கான தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் இருந்தபோது பா.ஜ.க அமைச்சர்கள், மாட்டுக் கோமியத்தைக் குடித்தாலும், சானத்தை உடலில் பூசிக் கொண்டாலும் கொரோனா வராது என பிரச்சாரம் செய்தனர். இப்படி மருத்துவத்தை அறிவியலுக்கு எதிராக பார்த்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணையத்திலும் தனது காவி மயத்தை பா.ஜ.க புகுத்திவிட்டது. இதன்விளைவாகத்தான் தேசிய மருத்துவ ஆணைய சின்னத்தில் இந்தியாவிற்குப் பதில் பாரத் என்றும் இந்து கடவுள் படத்தையும் புதிதாக இடம் பெற செய்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு மாணவர் சங்கங்கள், பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் என பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், "தேசிய மருத்துவ ஆணையத்தின் லட்சிணையில் இருந்த அசோக சக்கரம் நீக்கப்பட்டு இந்து கடவுள் தன்வந்திரி படம் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆணையம் தன்வந்திரி நிலையமாக முடியாது. நவீன மருத்துவத்தைமறுதலிக்க முனைவது அறிவியலோடு விளையாடுவது மட்டுமல்ல.. மக்களின் உயிரோடு விளையாடுவது" என விமர்சித்துள்ளது.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!