India
இரவில் நடந்த பயங்கரம் - தீப்பிடித்து எரிந்த சொகுசு பேருந்து : அலறிய பயணிகள் - 2 பேர் பலி!
டெல்லியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் செல்லும் விரைவுச் சாலையில் நேற்று இரவு சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அப்பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இரவு நேரம் என்பதால் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால் தீப்பிடித்த பேருந்திலிருந்து அவர்களால் உடனே வெளியேற முடியவில்லை. பலர் தீயில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
இந்த தீ விபத்து பற்றி அறிந்து போலிஸார் மற்றும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தது. பிறகு பேருந்தில் சிக்கிய பயணிகளைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் 10க்கும் மேற்பட்டோருக்குத் தீக்காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டுஅருகே இருந்த மேதாந்தா மருத்துவமனைக்கும், குருகிராமில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இவ்விபத்தில் 2 பயணிகளின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு போலிஸார் அனுப்பிவைத்தனர். இந்த தீ விபத்து சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பயணிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திருக்கோயில் பயிற்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு; ராசிபுரத்தில் டைடல் பூங்காவுக்கு அடிக்கல்: சாதனை படைத்த தமிழ்நாடு!
-
சென்னையில் ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை... வெற்றி கோப்பையை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் !
-
திருச்செங்கோடு மக்களுக்கு அடித்த ஜாக்பாட்... மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை... புதிய வசதிகள் என்ன ?
-
100 இடங்களில் வாக்காளராக இருந்த பெண்... ஹரியானா தேர்தலில் குளறுபடிகளை அம்பலப்படுத்திய ராகுல் காந்தி !