India
முகேஷ் அம்பானிக்கு 3 முறை கொலைமிரட்டல் : சிக்கிய 19 வயது இளைஞர் - தட்டி தூக்கிய போலிஸார் !
உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவராகவும், இந்தியாவின் முதல் பணக்காரராகவும் இருந்து வருபவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இவர் பெட்ரோல் சுத்திகரிப்பு, தொலைத்தொடர்புத்துறை என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், அக்டோபர் 27ம் தேதி முகேஷ் அம்பானிக்கு ரூ.20 கோடி தர வேண்டும், அப்படி தர மறுத்தால் சுட்டுக்கொன்று விடுவோம் என இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பின்னர், அக்டோபர் 28ம் தேதி ரூ.200 கோடி தரவேண்டும் என அதே பாணியில் மீண்டும் அம்பானிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 31ம் தேதி தொகையை பல மடங்கு அதிகப்படுத்தி ரூ.400 கோடி கொடுக்கவேண்டும் என இமெயில் வந்துள்ளது.
இது குறித்த விசாரணையில், இந்த மூன்று இமெயில்களும் ஷதாப் கான் என்ற ஒரே பெயர் கொண்ட ஐடியிலிருந்து வந்துள்ளது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அந்த ஐடிக்கு சொந்தமான நபர் யார் என விசாரணை நடத்தியதில், தெலுங்கானாவைச் சேர்ந்த 19 வயதான கணேஷ் ரமேஷ் வன்பார்தி என்ற இளைஞர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, தெலங்கானா விரைந்த போலீசார், அந்த இளைஞரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிபதி உத்தரவின் பேரில் நவம்பர் 8 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Also Read
-
5 கி.மீ தூரம் நடைபயணம் : தமிழ் வெல்லும்' - கலைஞர் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !