India
பட்டியலினப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - உ.பி-யில் பயங்கரம் !
உத்தரப்பிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்தில் 40 வயது பட்டியலினப் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் படவுரா கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் சுக்லா என்பவரின் மாவு மில்லில், தினமும் கூட்டிச் சுத்தம்செய்யும் வேலையை செய்து வருகிறார்.
இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று எப்போதும் போல மாவு மில்லுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது மாவு மில் உரிமையாளர் ராஜ்குமார் சுக்லா மற்றும் அவரின் சகோதரர்களான பௌவா சுக்லா, ராமகிருஷ்ண சுக்லா ஆகிய மூன்று பேர் அங்கு இருந்துள்ளனர்.
இவர்கள் அந்த பட்டியலினப் பெண்ணை மாவு மில்லில் வைத்தே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தை அவர் வெளியே கூறிவிடுவார் என பயந்து அவரை கொலை செய்துள்ளனர். அதோடு நிற்காத அவர்கள், அந்த பெண்ணின் சடலத்தை மூன்று துண்டுகளாக வெட்டியுள்ளனர்.
அந்த பட்டியலினப் பெண்ணை எப்போதும் வீட்டுக்கு அழைத்துச்செல்ல வரும் அவரின் மகன் நீண்ட நேரமாகியும் மாவு மில்லில் இருந்து தனது தாய் வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு தனது தாய் 3 துண்டுகளாக சடலமாக கிடந்ததை கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் ராஜ்குமார் சுக்லா மற்றும் அவரது சகோதரர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!