India
சிகிச்சைக்கு வந்த பெண் : அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர் - ம.பி-யில் அதிர்ச்சி !
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா பகுதியில் 19 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு கடந்த சில நாட்களாக கழுத்தில் சில பிரச்சனைகள் இருந்துள்ளது. இதன் காரணமாக இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.
அதற்காக அந்த பகுதியில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் தீபக் நாயக் (30) என்ற மருத்துவரை தொடர்பு கொண்டுள்ளார். இதற்காக தொலைபேசியில் பேசியபோது இவ்ர்களுக்கு நட்பு உருவாகியுள்ளது.
ஒரு கட்டத்தில் அந்த மருத்துவர் அந்த பெண்ணை காதலிப்பதாகவும் அவரை உடனடியாக திருமணம் செய்வதாகவும் கூறியுள்ளார். இதனை அந்த பெண் நம்பிய நிலையில், அவரை போபால் பகுதிக்கு வருமாறு அந்த மருத்துவர் அழைத்துள்ளார்.
அதன்படி அந்த பெண்ணும் சில நாட்கள் அந்த மருத்துவரிடம் மருத்துவர் கூறிய இடத்துக்கு வந்துள்ளார். அங்கு, அந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். பின்னர் அந்த இளம்பெண்ணை தனது வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது அந்த மருத்துவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருப்பதும், அவர்கள் ஒரிசாவில் இருப்பதும் அந்த இளம்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.
எனினும் அந்த மருத்துவர் அந்த இளம்பெண்ணை ஒரு அறையில் அடைத்து தொடர்ந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிய அந்த பெண் காவல் நிலையத்தை அணுகி தனது நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் மருத்துவர் தீபக் நாயக்கை கைது செய்ய வந்த நிலையில், அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தொடர்ந்து போலிசார் அவரை தேடி வருகின்றனர்.
Also Read
-
SIR : “அதிமுக - பாஜக களத்துக்கு வராதபோதுதான் சந்தேகமாக இருக்கிறது...“ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!