India
தெலங்கானா : கை கொடுப்பது போல வந்து கத்தி குத்து - பிரச்சாரத்துக்கு சென்ற MP-க்கு நேர்ந்த கொடூரம் !
ஆந்திர மாநிலத்தில் இருந்து 9 ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அந்த மாநிலம் தொடங்கியதில் இருந்து தற்போது வரை பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த சந்திர சேகர ராவ் முதலமைச்சராக உள்ளார்.
அங்கு இந்த வருடத்தோடு சட்டமன்றத்தின் ஆயுள் காலம் முடிவடையவுள்ள நிலையில், 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவுக்கு, நவம்பா் 30-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சி இடையே நேரடி மோதல் நிலவுகிறது.
இதன் காரணமாக அங்கு தேர்தல் பிரச்சாரம் உச்ச நிலையை அடைந்துள்ளது. பல்வேறு கட்சி தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பிஆர்எஸ் கட்சி சார்பில் திபெத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள பிரபாகர் ரெட்டி என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அவர், இன்று சித்திபேட் மாவட்டத்தின் சூரம்பள்ளி என்ற பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கைகொடுப்பது போல வந்த ஒருவர் பிரபாகர் ரெட்டியின் அருகே வந்ததும் தான் வைத்திருந்த கத்தியால் பிரபாகர் ரெட்டியின் வயிற்றில் குத்தினார்.
உடனடியாக அங்கிருந்த தொண்டர்கள் கத்தியால் குத்திய நபரை அடித்து போலீசாரிடம் ஒப்படைந்தனர். பின்னர் கத்தியால் குத்தப்பட்ட பிரபாகர் ரெட்டி தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பா.ஜ.க-வின் ஊதுகுழல் அன்புமணி” : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்!
-
“சனாதனத்தின் வேர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறுத்தெறிவார்” : திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு!
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!