India
BMW கார் கண்ணாடியை உடைத்து ரூ.14 லட்சம் திருடிச் சென்ற மர்ம நபர் : கர்நாடகாவில் பகீர்!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த BMW கார் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் ரூ.14 லட்சத்தைக் கொள்ளையடித்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், BMW கார் அருகே முகமூடி அணிந்த ஒருவர் நின்று கொண்டி இருக்கிறோர். அதேபோல் இருசக்கர வாகனத்தில் ஒருவர் உள்ளார். அப்போது நின்றுகொண்டிருந்த நபர் திடீரென கார் கண்ணாடியை உடைத்து அதன் வழியாக உள்ளே சென்று இரண்டு பைகளை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறார்.
பிறகு அங்குத் தயாராக நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி முகமூடி கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். மேலும் கொள்ளையர்கள் எடுத்து என்ற பையில் ரூ.14 லட்சம் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read
-
கோமாவில் இருந்து திடீரென விழித்தது போல பேசும் பழனிசாமி - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விமர்சனம் !
-
சிரியா,ஈரானைத் தொடர்ந்து கத்தார் மீதும் இஸ்ரேல் தாக்குதல்... காரணம் என்ன ? உலக நாடுகள் கண்டனம் !
-
நாட்டின் 15-வது குடியரசுத் துணைத் தலைவர்... எம்.பிக்கள் வாக்களித்த தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி!
-
கரூரில் களைகட்டும் முப்பெரும் விழா ஏற்பாடு : “1 லட்சம் இருக்கைகள்...” - செந்தில் பாலாஜி தகவல்!
-
மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வத்துக்கு 'முரசொலி செல்வம் விருது' ... விவரம் உள்ளே !