India
”மோடி அரசின் உண்மை முகத்தை ஊடகங்கள் மூடி மறைப்பது ஏன்?”: கேள்வி எழுப்பும் சுப்ரியா ஷிரினேட்!
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஒருநாள் பயணமாக உத்தராகண்ட் மாநிலம் சென்றார். அப்போது ரூ.4,200 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் அங்குப் புனிதமான ஜோலிங்காங் மலையின் முன்பாக பாரம்பரிய வெள்ளை நிற உடைகளை அணிந்து கொண்டு தியானம் செய்தார்.
அன்றைய தினமே, பா.ஜ.க அரசு கங்கை நீருக்கு 18% ஜி.எஸ்.டி வரியை விதித்தது. இந்த வரி விதிப்பிதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே x சமூகவலைதளப் பதிவில், இன்று நீங்கள் உத்தராகண்டில் இருப்பது நல்லது. உங்கள் அரசு கங்கை நீருக்கு 18% ஜி.எஸ்.டி வரியை விதித்துள்ளது. இது வீட்டிலிருந்து கங்கை நீரை வாங்குபவர்களுக்கு என்ன சுமையாக இருக்கும் என்று என்னால் யோசிக்க முடியவில்லை.
சாமானிய மக்களைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காத பா.ஜ.க அரசின் பாசாங்குத்தனத்தின் உச்சம் இது." என விமர்சித்துள்ளார். இதையடுத்து கங்கை நீருக்கு 18% ஜி.எஸ்.டி வரியை பா.ஜ.க அரசு ரத்து செய்தது.
இது குறித்து பெரிதாக ஊடகங்களில் செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், மோடி அரசின் முகத்தை ஊடகங்கள் மறைப்பதா? என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷிரினேட் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கூறிய சுப்ரியா ஷிரினேட், “மோடி அரசு கங்கை நீருக்கு 18% வரி விதித்ததை ஆவணங்களுடன் நாங்கள் அம்பலப்படுத்தியபோது, அந்த வரியை நீக்கிவிட்டனர். ஊடகங்கள் அம்பலப்படுத்த வேண்டிய பொய்களை நாங்கள் வெளிக்கொண்டு வருகிறோம். மோடி அரசாங்கத்தின் உண்மை முகத்தை ஊடகங்கள் மறைப்பது வருத்தமளிக்கிறது." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தோனியை தக்கவைத்த CSK : 2025 IPL தொடரில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் அணி விவரம்!
-
Mayonnaise விற்பனைக்கு திடீர் தடை விதித்த தெலங்கானா அரசு காரணம் என்ன?
-
தவறை ஒப்புக்கொண்ட ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி! : தொடக்கத்தில் உண்மையை மறுத்தது ஏன்?
-
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தி.மு.க MLA : நெகிழ்ச்சி சம்பவம் என்ன?
-
அமரன்: “கற்பனை Super Hero-க்களை பார்த்த குழந்தைகளுக்கு நிஜ Heroவை காட்டுங்கள்” - நடிகர் சிவகார்த்திகேயன்!