India
”மணிப்பூரை விட இஸ்ரேல் மீதுதான் மோடிக்கு அதிக அக்கறை இருக்கிறது” : ராகுல் காந்தி MP குற்றச்சாட்டு!
40 தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இம்மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சோரம் தாங்கா என்பவர் உள்ளார். இவரது கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மிசோரம் மாநிலத்தில் இன்று ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "ஒரே மாநிலமாக இருந்த மணிப்பூர் தற்போது இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. குழந்தைகள், பெண்கள் என பலர் கொல்லப்பட்ட நிலையில் கூட பிரதமர் மோடி அங்கு செல்லவில்லை.
ஆனால் பிரதமர் மோடி இஸ்ரேலில் என்ன நடக்கிறது என்பது குறித்துப் பேசுகிறார். இஸ்ரேல் நாட்டு மீது காட்டும் அக்கறையைக் கூட மணிப்பூர் மாநிலத்தின்மீது பிரதமர் மோடி காட்ட மறுக்கிறார். மிசோரம் மாநிலத்தில் போதைக்கு அடிமையாகி 250 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 5 ஆண்டு ஆட்சியில் 2000 பேருக்குமட்டுமே வேலை வழங்கியுள்ளது. மிசோரமில் சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் சிதைந்து கிடக்கிறது.
நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையினர், பழங்குடியினர், தலித்துகள் பா.ஜ.க ஆட்சியில் அச்சத்தை உணர்கிறார்கள். அந்த அளவிற்கு வெறுப்பு அரசியலை பா.ஜ.க செய்துள்ளது. பணமதிப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி போன்ற பா.ஜ.கவின் திட்டத்தால் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் முற்றிலுமாக அழித்து விட்டது.
இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்றால் அதானி என்று ஒரே வார்த்தையில் கூறலாம். அந்த அளவிற்கு ஒன்றிய பா.ஜ.க அரசின் திட்டங்கள் உள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!