India
7 மாத குழந்தையின் காலை கடித்த சிறுத்தை.. துணிச்சலுடன் மீட்ட தாய் - பாசப் போராட்டம்!
மகாராஷ்டிர மாநிலம் ஜூன்னர் வனப்பகுதி அருகே உள்ள டேல் என்ற கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் கார்கல். இவர்கள் குடும்பத்தின் ஆடுகளை வளர்த்து தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தனது7 மாத குழந்தையுடன் தாய் கார்கல் ஆடுகள் பட்டியில் அடைத்துவிட்டு அங்கேயே தூங்கியுள்ளார். பின்னர் திடீரென குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது.
பிறகு கண்விழித்துப் பார்த்தபோது சிறுத்தை ஒன்று குழந்தையின் காலை கடித்து காட்டுக்குள் இழுக்கப் பார்த்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்த கட்டை, கற்களை எடுத்து சிறுத்தை மீது வீசியுள்ளார்.
பின்னர் சிறுத்தை குழந்தையை விட்டு விட்டு, காட்டிற்குள் ஓடிவிட்டது. இதையடுத்து காயத்துடன் இருந்த குழந்தையை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இது பற்றி அறிந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கக் கிராமத்தைச் சுற்றிலும் கூண்டு வைத்துள்ளனர்.
Also Read
-
“விஜயால் முருங்கைக்காய் மட்டும்தான் பறிக்க முடியும்” : ஆர்.எஸ்.பாரதி விளாசல்!
-
“குதிரைபேரத்தில் விஜய் A1 குற்றவாளி” : தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் பேட்டி!
-
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா? : விஜய்க்கு, தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
-
தங்க மோதிரம் என்ன விஜய் வீட்டு பணமா? : முரசொலி தலையங்கம் அடுக்கடுக்காக கேள்வி!
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!