India
மோடி ஆட்சியில் பட்டினி கிடக்கும் இந்தியர்கள் : 63-ல் இருந்து 111-க்கு பின்தங்கிய இந்தியா - அதிர்ச்சி !
உலகம் முழுவதும் மக்கள் பட்டினியால் வாடும் நாடுகள் குறித்த தரவரிசையில் இந்தியா 111வது இடத்திற்கு சரிந்துள்ளது.
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் உலக பட்டினி குறித்து ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை வெளியிடுவது வழக்கம். இந்தியாவில் பா.ஜ.க, ஆட்சிக்கு வந்த பின்னர் பொருளாதார சூழல்களால் வறுமை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பட்டினியால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் தற்போது உலக அளவிலான பட்டினி குறியீடு தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.
Concern Worldwide and Welthungerhilfe என்ற ஜெர்மனியின் அமைப்பு இந்தாண்டு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உலகளவில் அதிகம் பட்டினி ஏற்பட்டுள்ள நாடுகள் குறித்த தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் பட்டினி குறைவாக உள்ள நாடுகள் முதலில் இடம்பெறும். அடுத்தடுத்து பட்டினி அதிகமுள்ள நாடுகள் இடம்பெறும்.
உலகளவில் பட்டினியால் வாடும் நாடுகள், ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த தரவரிசையில் 125 நாடுகள் உள்ள நிலையில், இந்தியா 111வது இடத்தில் உள்ளது. கடந்த 2020-ல் 94வது இடத்தில் இருந்த இந்தியா, 2021-ல் 101-வது இடத்தில் இருந்தது.
தொடர்ந்து கடந்த 2022-ல் 107-வது இடத்திற்கு பின்தங்கிய இந்தியா, மேலும் தற்போது 111-வது இடம் பிடித்து சரிந்து காணப்படுகிறது. உலக பட்டினி குறியீட்டில் மொத்தம் 125 நாடுகளில் இந்தியா 111-வது இடத்தில் இருப்பதற்கு ஒன்றிய பாஜக அரசே காரணம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்தியா ஆண்டுக்கு ஆண்டுக்கு தொடர்ந்து பின்தங்கி இருக்ப்பதற்கு மோடி அரசு தான் காரணம் என பொதுமக்களும், இணையவாசிகளும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத், "நேற்று வெளியாகியுள்ள உலக பட்டினி குறியீட்டின்படி (Global Hunger Index-2023) உலகின் 125 நாடுகளில் இந்தியா 28.7% பெற்று, 111வது இடத்தில் உள்ளது. இது பசி மற்றும் பட்டினியின் நிலைமை மிகவும் தீவிரமான மற்றும் கவலைக்குரியதாக இருக்கும் ஒரு பிரிவில் வைக்கிறது.
2013-ல் 63-வது இடத்தில் இருந்த இந்தியா, பா.ஜ.க அரசின் ஏழைகளுக்கு எதிரான கொள்கைகளால் 10 ஆண்டுகளில் பட்டினி குறியீட்டில் 111-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இப்போது ஒன்றியத்தில் இருக்கும் மோடி அரசு, இந்த அறிக்கையைப் புரிந்து ஏற்றுக்கொண்டு அதன் கொள்கைகளை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அந்த அறிக்கையையும் குறியீட்டையும் தவறானது என்றும் அதில் குறைகள் உள்ளது என்று அழைப்பர்."
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!