India
வன்கொடுமை செய்ய முயற்சி: தப்பி சென்ற சிறுமியை ரயிலில் தள்ளிவிட்ட கொடூரன்- துண்டிக்கப்பட்ட கை, கால்கள் !
உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தை சேர்ந்தவர 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் தனியே நடந்துசென்றபோது விஜய் மெளரியா என்பவர்அந்த சிறுமியை வழிமறித்துள்ளார். தொடர்ந்து அந்த நபர் அந்த பெண்ணிடம் தவறான நடந்து கொள்ள முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அவரை தள்ளிவிட்டு அங்கிருந்த ரயில்வே தண்டவாளத்தின் அருகே தப்பியோடியுள்ளார். எனினும் அந்த சிறுமியை விடாத அந்த விஜய் மெளரியா சிறுமியை விரட்டிச் சென்றுள்ளார். அப்போது அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று வந்துகொண்டிருந்துள்ளது.
அந்த தருணத்தில் விஜய் மெளரியா அந்த சிறுமியை பிடித்து அவரை ரயிலில் தள்ளி கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் அந்த சிறுமியின் ஒரு கையும் இரு கால்களும் துண்டிக்கப்பட்டன. அதன் பின்னர் விஜய் மெளரியா அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சிறுமியின் கதறலைக் கேட்டு அந்த பகுதிக்கு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.
எனினும் போலிஸார் அந்த புகாரை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்ட விஜய் மெளரியாவை போலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !