India

கடனுக்கு பரோட்டா.. கொடுக்க மறுத்த உரிமையாளர்.. ஆத்திரத்தில் ஹோட்டல் உணவுகளில் சேற்றை வீசிய இளைஞர் கைது !

கேரள மாநிலம் கொல்லத்தில் அமைந்துள்ளது எழுகோன் என்ற பகுதி. இங்கு தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அசைவ உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அனந்த் என்ற இளைஞர் ஒருவர் இங்கே உணவு வாங்க வந்துள்ளார். அதன்படி பீஃப் கறியுடன் 10 பரோட்டா பார்சல் கேட்டுள்ளார்.

வாடிக்கையாளர் அனந்த் கேட்டவாறே, 10 பரோட்டாவும் பீஃப் கறியும் அந்த கடையில் பார்சல் கட்டிமுடிக்கப்பட்டது. இதையடுத்து ஹொட்டல் உரிமையாளர் அந்த உணவுக்கான பணத்தை அந்த இளைஞரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவரோ தன்னிடம் பணம் இல்லை என்றும், நாளை தருவதாகவும் கூறியுள்ளார். இதற்கு உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் தொடர்ந்து அந்த இளைஞர் மீண்டும் மீண்டும் கேட்டுள்ளார். அப்போதும் உரிமையாளர் தர மறுத்ததால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் அனந்த், ஹோட்டலில் இருந்த பரோட்டா மாவில் சேற்று மண்ணை வீசினார். மேலும் மீதமுள்ள உணவு பொருள்களிலும் சேற்றை வாரி வீசினார்.

அதோடு ஹோட்டல் உரிமையாளரை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கவும் செய்தார். இதைத்தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்ட இளைஞர் அனந்தை கைது செய்துனர். கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கோபி மஞ்சூரியன் சாப்பிட்ட நகை கடை ஊழியர்.. ரூ.500 அபராதம் விதித்த மெட்ரோ நிர்வாகம் ! - பின்னணி என்ன ?