India
ஓடும் ரயிலில் தம்பதி மேல் சிறுநீர் கழித்த இளைஞர்.. உ.பி-யில் அதிர்ச்சி.. அபராதம் விதித்து போலீஸ் அதிரடி !
டெல்லியில் உள்ள நிசாமூதினில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் மனிகாபூர்ருக்கு சம்பர்க் க்ரண்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் வயதான மருத்துவ தம்பதிகள் படுக்கை வசதி கொண்ட பி-3 ஏசி கோச்சில் பயணித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், மது போதையில் இருந்த 19-வயதான ரிதேஷ் என்ற இளைஞர் ஒருவர் உத்தர பிரதேசத்தில் உள்ள மஹோபா ரயில் நிலையத்திலிருந்து அந்த ரயிலில் ஏறியுள்ளார். மதுபோதையில் இருந்த அந்த இளைஞர் திடீரென அந்த தம்பதிகள் இருந்த பகுதிக்கு சென்றுள்ளார்.
சென்றவர் அந்த தம்பதிகள் மேலும், அவர்களின் உடமைகள் மீதும் சிறுநீர் கழித்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த அந்த தம்பதி உடனடியாக அங்கிருந்து நகந்ந்துள்ளனர். மேலும், அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை பிடித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதன்படி ஜான்சி ரயில் நிலையத்தில் போலிஸார் தயாராக இருந்தநிலையில், அவர்களிடம் பயணிகள் அந்த இளைஞரை ஒப்படைத்துள்ளனர். விசாரணையில் அந்த இளைஞர் டெல்லியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலிஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அந்த இளைஞருக்கு அபராதம் விதித்தனர்.
அதன் பின்னர் அபராத தொகையை செலுத்திய பிறகு அந்த இளைஞரை போலீசார் விடுவித்தனர். ஓடும் ரயிலில் பயணிகள் மீது இளைஞர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்று நடக்காத வண்ணம் ரயிலில் பாதுகாப்புக்கு கூடுதல் போலிசாரை நியமிக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!