India
”40 குண்டுகள் உன் உடலில் பாயும்”: ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு வீடியோ வெளியிட்ட மாணவர்- உ.பியில் பகீர்
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர் சுமித் சிங். ஆசிரியரான இவரிடம் மாணவர்கள் பயிற்சி வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இவரது ஊரைச் சேர்ந்த ஒரு மாணவரும் இப்பயிற்சி வகுப்பில் படித்து வந்துள்ளார்.
அப்போது அந்த மாணவர் மாணவியிடம் பேசுவதை ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது சகோதரனை அழைத்து வந்து வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் அந்த மாணவனும் பயிற்சி வகுப்பு முடித்து விட்டு வெளியே சென்றுவிட்டார்.
இந்நிலையில் ஆறு மாதங்கள் கழித்து அம்மாணவரும் அவரது சகோதரரும் மீண்டும் பயிற்சி மையத்திற்கு வந்து ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது அவர்கள் எடுத்து வந்த துப்பாக்கியை வெளியே எடுத்து ஆசிரியரை சுட்டுள்ளனர்.இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், "6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வருவேன். 40 குண்டுகளை உன் உடலில் பாய்ச்சுவேன். இன்றும் 39 குண்டுகள் உள்ளது" என அவர்கள் மிரட்டுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
த.வெ.க அரசை எதிர்க்கும் சி.பி.எம் : நாளை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு - காரணம் என்ன?
-
“முதல்வர் அறை டெண்டரில் முறைகேடு? மோசடித்தனத்தின் உச்சம்” : முரசொலி தலையங்கம் விளாசல்!
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!