India
5% கமிஷன் தராததால் ஆத்திரம்.. புதிதாக அமைக்கப்பட்ட சாலையை பெயர்த்தெடுத்த பாஜக MLA.. உ.பி-யில் அதிர்ச்சி !
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். பாஜக ஆளும் மாநிலத்தில் வழக்கமாக இருப்பது போல மதவாதம் மற்றும் மோசமான ஆட்சி நிர்வாகம் உத்தரபிரதேச மாநிலத்திலும் தொடர்ந்து வருகிறது.
அங்கு ஷாஜகான்பூர் முதல் புடான் வரையிலான சாலை மிக மோசமான இருந்துள்ளது. இதன் காரணமாக பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சாலை அமைக்க பொதுப்பணித்துறையினர் ஒப்புக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து இந்த பணி அங்குள்ள ஒப்பந்தக்காரரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் ஒப்பந்ததாரர் சாலை அமைத்து வந்துள்ளனர். ஆனால், அங்கு வந்த சிலர் தங்களை பாஜக எம்எல்ஏ வீர் விக்ரம் சிங்கின் ஆதரவாளர்கள் என்று கூறி 5 % பணத்தை கமிஷன் தருமாறு கூறியுள்ளனர். ஆனால், அதனை ஒப்பந்ததாரர் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ-வின் ஆட்கள் புல்டோசரை கொண்டு வந்து புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையை பெயர்த்து எடுத்துள்ளனர். மேலும், பணம் தராவிட்டால் இன்னும் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் ஒப்பந்ததாரரை எம்.எல்.ஏ-வின் ஆட்கள் மிரட்டியுள்ளனர்.
இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே இந்த செய்தி மற்றும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து காவல்துறை சார்பில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ வீர் விக்ரம் சிங்கின் ஆதரவாளர்கள் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
Also Read
-
நாடு முழுவதும் எத்தனை தபால் அலுவலகங்கள் மூடப்பட்டன? : நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு MP கேள்வி!
-
அமெரிக்க வரிவிதிப்பு : விரைவில் தீர்வு காண வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
காந்தியின் ராமராஜ்யமும், பா.ஜ.கவின் வதை ராஜ்யமும் : தெள்ளத் தெளிவாக விளக்கிய முரசொலி!
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!
-
“VB G RAM G மசோதா என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம்!”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கண்டனம்!