India
’டீ விருந்துக்கு அழையுங்கள்’.. பத்திரிகையாளர்களை கொச்சைப்படுத்திய பா.ஜ.க தலைவர் : வலுக்கும் கண்டனங்கள்!
மகாராஷ்டிர பா.ஜ.க தலைவராக இருப்பவர் சந்திரசேகர் பவான்குலே. இவர் அகமத்நகரில் நடைபெற்ற பா.ஜ.க தொகுதி பணியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய சந்திரசேகர் பவான்குலே, "பத்திரிகையாளர்கள் ஒரு சிறிய சம்பவத்தை ஏதோ குண்டுவெடிப்பு நடந்தது போல காட்டுகிறார்கள். இதுபோன்று தொல்லைகளை உருவாக்கும் பத்திரிகையாளர்களின் பட்டியலைத் தயார் செய்யுங்கள். அவர்களை டீ விருந்துக்கு அழைத்து, எங்களுக்கு எதிராக எதையும் எழுதக்கூடாது என கூறுங்கள். நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.
மேலும் அவர்களை தாபாக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். நன்றாக அவர்களை நடத்துங்கள். எங்களைப் பற்றி எதிர்மறையான செய்திகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பாராட்டு செய்திகள் மட்டுமே இருக்க வேண்டும். மோடி அரசாங்கத்தின் தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என வலியுறுத்துங்கள்" என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவான்குலே பேச்சுக்குப் பத்திரிகையாளர்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும் காங்கிரஸ் தலைவர் விஜய் வடேட்டிவார், "எல்லாப் பத்திரிகையாளர்களும் விற்றுத்தீர்ந்துவிடவில்லை. பா.ஜ.க தலைவரின் பேச்சு ஊடக சுதந்திரத்தை அவமதிக்கிறது" என தெரிவித்துள்ளார்
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!