India
ரூ.3100 கடன்.. பூண்டு வியாபாரியை நிர்வாணமாக ஓட வைத்த கும்பல்.. உ.பி-யில் தொடரும் அவலம் - காங். கண்டனம்!
உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் நொய்டாவில் உள்ள மைன்பூரி என்ற பகுதியில் வசித்து வருபவர் அமித் (35). இவர் சப்ஜி மண்டியில் செக்டார் 88 இல் வண்டியில் பூண்டு விற்று வருகிறார். பூண்டு வியாபாரம் செய்து வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது வியாபாரத்துக்காக ஒருவரிடம் ரூ.5,600 கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை சிறிது நாளில் செலுத்தி விடுவதாக கூறிய அவர், செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் கடனை கொடுத்தவர் திரும்ப கேட்டுள்ளார்.
எனவே கடினப்பட்டு ரூ.2,500 அவரிடம் செலுத்திவிட்டு மீதம் ரூ.3,600 விரைவில் செலுத்தி விடுவதாக கூறியுள்ளார் வியாபாரி அமித். ஆனால் அவரது பேச்சை கேட்காத கடன் கொடுத்த நபரோ அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் தனது நண்பர்கள் உதவியோடு வியாபாரி அமித்தை கடுமையான வார்த்தைகளால் பேசி, குச்சியை வைத்து அடித்து ஆடைகளை களைந்துள்ளார்.
பின்னர் அந்த வியாபாரியை சாலையில் நிர்வாணமாக ஓட சொல்லி வற்புறுத்தி தாக்கியுள்ளனர். தொடர்ந்து இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில், போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சம்பவம் குறித்த செய்தி தெரியவந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முக்கிய குற்றவாளி சுந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர் பகந்தாஸ் சிங் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை உத்தர பிரதேச காங்கிரஸ், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு கண்டனங்களை தெரிவித்துள்ளது.
Also Read
-
”மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே” : பதிவுத் தபால் சேவையை நிறுத்தம் - சு.வெங்கடேசன் MP எதிர்ப்பு!
-
தமிழ்நாடு வரும் ஒன்றிய அமைச்சர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்னது என்ன?
-
“சிறுபான்மையினரின் கல்வி மேம்பாட்டிற்கு நடவடிக்கை என்ன?” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கேள்வி!
-
சிறுபான்மையினர் மீதான அத்துமீறல்கள் அதிகரிப்பு : கன்னியாஸ்திரிகள் கைது சம்பவத்திற்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
“இந்தியாவுக்கு உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்ட அவமானம் அல்லவா?” : முரசொலி தலையங்கம் கண்டனம்!