India
”பெருமை பேசி மக்களை மேலும் கொடுமைப்படுத்தாதீர்கள்” : மோடி அரசை விமர்சித்த மல்லிகார்ஜூன கார்கே!
5 நாட்கள் நடைபெறும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இன்று ஒருநாள் மட்டும் பழைய நாடாளுமன்ற கட்டத்தில் கூட்டம் நடைபெறுகிறது. நாளையிலிருந்து வரும் 22ம் தேதி வரை புதிய நாடாளுமன்ற கட்டத்தில் கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்த விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்து உரையாற்றினார். இதையடுத்து மாநிலங்களவையில் பேசிய எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, " ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோதுதான் இந்திய நாட்டிற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.
நம் நாட்டில் அதிகார மாற்றம் என்பது பலத்தின் அடிப்படையில் நடக்கவில்லை. காந்தியடிகள் அடைந்த சுதந்திரம் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. இந்த கட்டடத்தில் 75 வருடங்கள் இந்திய நாட்டின் முகம் உள்ளது. வேகமாக முன்னேற ஜவஹர்லால் நேரு அனைவரையும் அழைத்துச் சென்றார்.
தனது முதல் அமைச்சரவையில் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களை இணைத்துக் கொண்டார். அவர் நாடாளுமன்றத்தை மதித்தார். எதிர்கட்சி தலைவர்கள் பேச்சைக் கவனமாகக் கேட்பார். ஆனால் இப்போது என்ன நடக்கிறது. ஒரு நாட்டின் பிரதமர் நாடாளுமன்றத்தின் அவைக்கே வருவதில்லை.
கேள்வி கேட்கும் எதிர்கட்சிகளின் வீடுகளுக்கு ED மற்றும் CBI அவர்களின் வீட்டிற்கு அனுப்பப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் பிரதமர் மோடி செல்கிறார். ஆனால் இன்னும் ஏன் மணிப்பூருக்குப் பிரதமர் செல்லவில்லை?.
நீங்கள் மாற்ற விரும்பினால் தற்போதைய கொடுமையான நிலைமையை மாற்றுங்கள். பெயர்களை மாற்றினால் என்ன நடக்கும்?. எதையாவது கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் இளைஞர்களுக்கு வேலை கொடுங்கள்.
உங்களால் எதுவும் செய்ய முடியாவிட்டால், உங்கள் நாற்காலியை விட்டுவிடுங்கள். நீங்கள் எதிர்கட்சிகளை பயமுறுத்தினால் என்ன நடக்கும்?.உங்கள் ஆட்சியின் பெருமைகளைப் பேசிக்கொண்டு மக்களை மேலும் கொடுமைப்படுத்தாதீர்கள்" என தெரிவித்துள்ளார்
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!