India
ரூ.10 கொடுத்து ஒரு மாத காலமாக சிறுமியை.. 68 வயது முதியவர் செய்த கொடூர செயலால் அதிர்ந்துபோன மக்கள் !
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தோடு வஸ்து வருகிறார். அந்த பகுதியில் அமைந்திருக்கும் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வரும் இந்த சிறுமி, தினமும் பள்ளி முடிந்து தனியாக நடந்து வந்துள்ளார். அந்த சமயத்தில் சிறுமிக்கு முதியவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியிடம் அந்த முதியவரும் நன்றாக பேசி வந்துள்ளார்.
இதனால் சிறுமி அந்த முதியவரை தினமும் சந்தித்து வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் சிறுமியை முதியவர் தவறான எண்ணத்தில் அணுக எண்ணியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று சிறுமிக்கு ரூ.10 கொடுத்து தனியாக அழைத்து சென்றுள்ளார். அவரை நம்பி சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வன்கொடுமை செய்த பிறகு வெளியில் யாரிடமாவது சொன்னால் கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட முதியவர் கடந்த மாதம் சிறுமிக்கு ரூ.10 கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனை பற்றி சிறுமி வெளியில் கூறமுடியாமல் தவித்து வந்துள்ளார். இந்த சூழலில்தான் சிறுமி சாப்பிட முடியாமல் மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளார்.
தொடர்ந்து பெற்றோர் சிறுமியிடம் வற்புறுத்தி கேட்கவே, நடந்தவற்றை சிறுமி கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்த பெற்றோர் உடனடியாக இதுகுறித்து போலீசாரிடம் உடனடியாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 78 வயது முதியவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ரூ.10 கொடுத்து ஒரு மாத காலமாக 10 வயது சிறுமியை 68 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!