India
பூட்டிய வீட்டுக்குள் பல மாதங்களாக அடைந்து கிடந்த தாய், சிறுவன், நாய்கள்.. புதுவையில் அதிர்ச்சி !
புதுச்சேரி, ரெயின்போ நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் சசிகலா. இவருக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், தனது கணவரை பிரிந்து தனியே வசித்து வந்துள்ளார். அரசு ஊழியராக பணிபுரிந்து வந்த இவரது வீட்டில் நாய்களையும் வளர்த்து வந்துள்ளார். மகன், செல்ல பிராணிகள், வேலை என்று வாழ்ந்து வந்த சசிகலா, கடந்த பல மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
சசிகலாவுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல விருப்பமில்லாமல் இருந்து வந்துள்ளார் எனவே தனது வீட்டினுள்ளே மகன் மற்றும் செல்ல பிராணிகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த சூழலில் இவரது வீட்டில் இருந்து அடிக்கடி துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்து வந்துள்ளனர். அந்த வகையில் சம்பவத்தன்று அந்த வீட்டில் இருந்து அதிகப்படியான துர்நாற்றம் வந்துள்ளது.
இதனால் அக்கம்பக்கத்தினர் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் பூட்டிய வீட்டின் கதவை திறந்து உள்ளே இருந்த செல்லப்பிராணிகள், சசிகலா, அவரது 6 வயது மகன் ஆகியோரை மீட்டனர். தொடர்ந்து அங்கிருந்து மீட்கப்பட்ட 6 நாய்களை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு கொண்டு சென்றனர்.
மேலும் மீட்கப்பட்ட சசிகலா மற்றும் அவரது மகனை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த நிகழ்வு குறித்து விசாரிக்கையில், சசிகலா தனது வீட்டில் அவர்கள் சாப்பிட்ட மற்றும் பயன்படுத்திய குப்பை கழிவுகள் மலைபோல் தேங்கியும் நாய்கள் மற்றும் மனித மலங்களுக்கு நடுவே துர்நாற்றம் வீசிய நிலையிலும் ஓராண்டுகளாக வசித்து வந்தது தெரியவந்தது.
அதோடு அவர்கள் உணவுக்காக ஆன்லைன் மூலம் தேவையான பொருட்களை ஆர்டர் செய்து வந்ததும், மின்சார கட்டணத்தை கூட ஆன்லைன் மூலமே செலுத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தொடர்ந்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!