India
17 வயது பட்டியலின சிறுமியை வன்கொடுமை செய்த பாஜக தலைவர்.. தடுக்க வந்த தந்தை அடித்து கொலை: உ.பியில் பகீர்!
உத்தர பிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மசூம் ரசா ரஹி. இவர் பா.ஜ.கவின் சிறுபான்மை பிரிவு தலைவராக உள்ளார். இவரது வீட்டின் மேல் மாடியில் ஒரு குடும்பம் வாடகைக்குத் தங்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த 28ம் தேதி மசூம் ரசாரஷி மேல்மாடியில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த வீட்டிலிருந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை தடுக்க முயன்றுள்ளார்.
அப்போது அவரை கடுமையாக மசூம் ரசாரஷி தாக்கியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். இங்குச் சிகிச்சை பலனின்றி சிறுமியின் தந்தை உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சிறுமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் பா.ஜ.க தலைவர் மசூம் ரசாரஷி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி அறிந்த உடன் பா.ஜ.க தலைவர் தலைமறைவாகிவிட்டார்.
மேலும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மசூம் ரசாரஷி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் பாண்டே கூறியுள்ளார். 17 வயது பட்டியலின சிறுமியை பா.ஜ.க தலைவர் பாலியல் வன்கொடுமை செய்து தடுக்க வந்த அவரது தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“விஜயால் முருங்கைக்காய் மட்டும்தான் பறிக்க முடியும்” : ஆர்.எஸ்.பாரதி விளாசல்!
-
“குதிரைபேரத்தில் விஜய் A1 குற்றவாளி” : தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் பேட்டி!
-
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா? : விஜய்க்கு, தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
-
தங்க மோதிரம் என்ன விஜய் வீட்டு பணமா? : முரசொலி தலையங்கம் அடுக்கடுக்காக கேள்வி!
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!