India
திட்டிய ஆசிரியர்கள்.. பள்ளியின் 6வது மாடியில் இருந்து குதித்த 10ம் வகுப்பு மாணவன்: அதிர்ச்சி சம்பவம்!
மேற்குவங்க மாநிலம் கஸ்பா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தவர் ஷேக் ஷான். இவர் சம்பவத்தன்று பள்ளியின் 6 வது மாடி கட்டடத்தில் இருந்து கீழே குதித்துள்ளார்.
பிறகு பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பள்ளி நிர்வாகத்தினர் அழைத்து சென்றுன்றனர். அங்கு மாணவனைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து மாணவனின் பெற்றோருக்குப் பள்ளி நிர்வாகம் தகவல் கொடுத்துள்ளது. மகன் இறப்புச் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் அளித்தனர்.
இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதில், பள்ளியில் கொடுக்கப்பட்ட ப்ராஜெட் வேலையை ஷேக் ஷான் செய்யாமல் இருந்துள்ளார். இதனால் ஆசிரியர் அவரை திட்டியுள்ளார். மேலும் சக மாணவர்கள் முன்பு அவரை கிண்டல் அடித்து அவமானப்படுத்தியுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த ஷேக் ஷான் பள்ளியின் 6வது மாடி கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருப்பினும் மேலும் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !