India

பட்டப்பகலில் ரூ.5 கோடி மதிப்புள்ள வைரம் கொள்ளை.. 3 மணி நேரத்தில் மீட்ட போலிஸ்: சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

குஜராத் மாநிலம் சூரத் நகரம் வைர நகைக்கு மிகவும் பிரபலமான இடம். இங்கு உள்ள சர்தானா பகுதியில் பாரம்பரிய நகைகளை எடுத்துச் செல்லும் கூரியர் நிறுவன ஊழியர்களை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்துள்ளது.

பின்னர் துப்பாக்கியைக் காட்டி அவர்களிடம் இருந்த இரண்டு துணிப்பைகளைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற துணிப்பையில் ரூ.5.53 கோடி மதிப்புள்ள வைர நகைகள் இருந்துள்ளது.

இது பற்றிக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளை நடந்த இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியைக் காட்டி துணிப்பை கொள்ளையடித்துச் செல்லும் சம்பவம் பதிவாகி இருந்தது.

இதையடுத்து போலிஸார் நவ்சாரி வல்சாத் நெடுஞ்சாலையில் போலிஸார் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாகக் கொள்ளையர்களது வாகனம் வந்தபோது போலிஸார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த நகையைமிட்டனர்.

Also Read: புகாரளிக்க சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. போலீஸாரின் வெறிச்செயல்.. ஹரியானாவில் அதிர்ச்சி !