India
3 வருடம் ஒன்றாக வாழ்ந்து வந்த காதலர்கள்.. காதலியை அடித்து கொன்ற காதலன்: விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வைஷ்ணவ் மற்றும் தேவி. இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும்போது காதலித்து வந்தனர். இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூருவில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் காதலி மீது வைஷ்ணவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்தது. அப்படி நேற்றும் இதே போல் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் ஆவேசமடைந்த வைஷ்ணவ் வீட்டுச் சமையல் அறையிலிருந்த குக்கர் மூடியை எடுத்துக் காதலி தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் அங்கிருந்து வைஷ்ணவ் தப்பிச் சென்றுள்ளார். இது பற்றி போலிஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலிஸார் தேவி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் தப்பிச் சென்ற வைஷ்ணவை தேடிவந்தனர். இதையடுத்து அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அவர் தலைமறைவாக இருந்த இடத்தை போலிஸார் கண்டுபிடித்து கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலிஸார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 வருடம் ஒன்றாக வசித்து வந்த காதலியை காதலனே சந்தேகத்தில் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!