India
காதலன் உயிரிழப்பு.. 2 மாதம் கழித்து விபரீத முடிவெடுத்த காதலி: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி!
புதுச்சேரி பிராந்தியம் ஏனாம் பகுதி ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள யூ.கே.வி நகரைச் சேர்ந்தவர் மௌனிகா. இவரது பெற்றோர் இறந்த நிலையில் கடந்த 10 வருடமாக மாமா வீட்டில் தங்கி, செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
மேலும் மௌனிகா ஏனாம் குருசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சின்னா என்ற வாலிபரை காதலித்து வந்தார். கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சகோதரரிடம் கஞ்சா புகைக்க 500 ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர் பணம் தர சகோதரர் மறுத்துள்ளார்.
அப்போது சின்னா தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொள்வதாக மிரட்டியபோது எதிர்பாராத விதமாக அவரது உடலில் தீப் பிடித்துக் கொண்டது. பிறகு தீயை அணைத்துப் பலத்த காயத்துடன் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து காதலன் உயிரிழந்ததால் கடந்த இரண்டு மாத காலமாக மௌனிகா கல்லூரி செல்லாமல் சோகத்திலிருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மாமா காவல்நிலையத்திற்குப் புகார் கொடுத்தார். பின்னர் அங்கு வந்த போலிஸார் மொளனிகாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை செய்து கொள்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் தனது காதலன் பெயரை கையில் பொருத்திய ரீல்சை மௌனிகா வெளியிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read
-
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசம் : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் த.வெ.க-வினர்!
-
”இயற்கையின் ரகசியம்.. நீலகிரியில் அரிய வகை பறக்காத ஈ கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த மக்கள்!”
-
அடுத்தடுத்து வெளிவரும் த.வெ.க நிர்வாகிகளின் மோசடி : ரூ.15 கோடி ஏமாற்றம்!
-
”தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம்.. ஆளுநரின் அஜெண்டாவிற்கு தலையாட்டிய விஜய்” : முரசொலி விமர்சனம்!
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!