India
தங்கை மகனுடன் Walking சென்ற பெண்.. சடலமாக மீட்கப்பட்ட சோகம்.. கர்நாடகாவில் என்ன நடந்தது ?
ஓசூர் அடுத்த கர்நாடகா மாநிலம் பன்னர்கட்டா அருகேயுள்ள பாடராயனதொட்டியைச் சேர்ந்தவர் முனிரத்னம்மா (வயது 38), ஐந்து வயது நிரம்பிய இவரது தங்கை மகனை அழைத்துக்கொண்டு நேற்று மாலையில் நடை பயிற்சிக்காக சென்றுள்ளார். இரவு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் தேடிப் பார்த்தனர்.
சுமார் இரவு 8 மணியளவில் பூதனஹள்ளி பகுதியில் உள்ள ஒரு புதரின் அருகில் தலை, கை, கால்களில் பலத்த காயங்களுடன் சிறுவனின் அழுகை குரல் கேட்டதை அடுத்து அவனை மீட்ட குடும்பத்தினர் தொடர்ந்து முனிரத்தினம்மாவை தேடி வந்தனர்.
இரவு நேரம் என்பதால் அவரைத் தேட முடியாமல் வீட்டுக்கு திரும்பிய உறவினர்கள் நேற்று அந்தப் பகுதியில் தேடிய நிலையில் அருகில் சடலமாக கிடந்த முனிரத்தினம்மாவை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனே இது பற்றி பன்னார்கட்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசாரும் தடையவியல் நிபுணர்களும் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இதற்கு காரணமானவர்களை தேடி வருகின்றனர்.
மேலும் காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தையுடன் அவரது தாயார் கதறி அழுத காட்சியும், இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமும் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !