India
தனியார் பயிற்சி மையங்களில் தொடரும் மாணவர் தற்கொலை.. மின்விசிறியில் Spring பொருத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டுள்ளனர்.
நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாகத்தில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.
நீட் தேர்வு அமலுக்கு வந்ததில் இருந்து , தனியார் பயிற்சி மையங்களில் படித்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றிபெற முடியும் என நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தனியார் பயிற்சி மையங்கள் லட்ச கணக்கில் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன. மேலும், அங்கு பயிலும் மாணவர்களுக்கு அதிகப்படியான வேலைப்பளுவால் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரிலும் நூற்றுக்கணக்கான தனியார் தேர்வு பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இதனால் இது தனியார் தேர்வு பயிற்சி மையங்களின் தலைநகர் என்றே அழைக்கப்படுகிறது. இன்று கடந்த மாதம் நீட் தேர்வுக்கு பயிற்சி மையத்தில் படித்து, தயாராகி வந்த 2 மாணவர்கள் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சில நாட்களுக்கு முன்னர் கூட JEE தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த 18 வயது மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோட்டா நகரில் இந்த ஆண்டில் இதுவரை 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் 2022ல் 15 மாணவர்களும், 2019ல் 18 பேரும், 2018ல் 20 பேரும், 2017ல் ஏழு பேரும், 2016ல் 17 பேரும், 2015ல் 18 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோட்டா மாவட்ட ஆட்சியர் ஓம் பிரகாஷ் பங்கர் கோட்டா நகரில் படிக்கும் மாணவர்களுக்கு மனநலம் மற்றும் பாதுகாப்பை வழங்கவும், அதிகரித்து வரும் தற்கொலைகளைத் தடுக்கவும், மாநிலத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும் இருக்கும் மின்விசிறிகளில் ஒரு பாதுகாப்பு ஸ்பிரிங் சாதனத்தை நிறுவ உத்தரவிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த உத்தரவிற்கு இணங்காத தங்குமிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இது போன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் மாணவர்கள் வேறு முடிவை எடுக்க வலுவகுக்கும் என மனநல நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!