India
”பிரதமர் மோடி அடுத்த ஆண்டு தேசியக்கொடி ஏற்றுவார்; எங்கு தெரியுமா?” : மல்லிகார்ஜூன கார்கே சொல்வது என்ன?
இந்திய நாட்டின் 77வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் " என்னுடைய பிரதமர் பதவிக் காலத்தில் நான் இன்று 10வது முறையாக உரையாற்றுகிறேன். அடுத்த வருடம் இதே இடத்தில் இந்தியாவின் சாதனைகளைப் பட்டியலிடுவேன்" என தெரிவித்திருந்தார்.
இவரின் இப்பேச்சு 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.கதான் வெற்றி பெறும் என்பதை மறைமுகமாக தெரிவிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதற்குக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, "மீண்டும் அடுத்த வருடம் செங்கோட்டையில் கொடியேற்றுவேன் என பிரமர் மோடி கூறியுள்ளார். செங்கோட்டையில் அவர் கடைசியாக ஏற்றுவது இதுதான். அடுத்த ஆண்டு அவரது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றுவார்" என தெரிவித்துள்ளார்.
இதேபோல் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், "நரேந்திர மோடி அடுத்த ஆண்டு செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்ற மாட்டார். 2024ம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வருவோம்" என கூறியுள்ளார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!