India
அரசு சலுகையில் செல்போன் : ஆசை வார்த்தை கூறி சிறுமியை வன்கொடுமை செய்த அரசு ஊழியர்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!
ராஜஸ்தான் மாநிலம் கரவுலி என்ற பகுதியில் 17 வயது சிறுமி தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவரது உறவினரான சுனில் குமார் ஜங்கித் என்ற 35 வயது இளைஞர் இவரது வீட்டுக்கு அடிக்கடி வருவதாக கூறப்படுகிறது. பொது சுகாதார பொறியியல் துறையில் கேஷியராக இருக்கும் இவர், சிறுமியிடம் நன்றாக பேசியுள்ளார்.
சிறுமியின் தாய் கூலி தொழில் செய்து வரும் நிலையில், அவரது தந்தை ஜெய்ப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இதனால் பிரதான நேரம் சிறுமி தனியாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த சூழலில் சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சுனில் குமால் சிறுமியிடம் பேசியுள்ளார். மேலும் தான் அரசு சலுகை மூலம் குறைவான விலையில் செல்போன் வாங்கி தருவதாக ஆசை காட்டியுள்ளார்.
மேலும், இது விரைவில் தீர்ந்து விடும் என்பதால் தன்னுடன் வந்து செல்போனை வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆரம்பத்தில் சிறுமி தனது தாயிடம் கூறிவிட்டு வருவதாக தெரிவித்தார். ஆனால் சுனில் குமார் வந்து சொல்லிக்கலாம் என்று கூறியதால் அவரை நம்பிய சிறுமி அவருடன் காரில் சென்றுள்ளார். அப்போது சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கூட்டி சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் அந்த சிறுமியை இத்கா என்ற பகுதிக்கு செல்லும் வழியில் விட்டுச் சென்றுள்ளார். ஒருவழியாக வீட்டுக்கு வந்த சிறுமி தனக்கு நடந்தவற்றை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அதன்பேரில் தாயும் அவரது உறவினர்களும் சுனில் குமாரை பிடித்து சாலையில் வைத்தே சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்கள் பிடியில் இருந்து சுனில் குமார் தப்பியோடியுள்ளார்.
இதையடுத்தே பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், கடந்த 10-ம் தேதி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சுனில் குமார் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தநிலையில், நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குறைந்த விலையில் செல்போன் வாங்கி தருவதாகா கூறி பள்ளி மாணவியை வன்கொடுமை செய்த அரசு ஊழியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !