India

“ஒரு நிமிஷம் நின்னு பேசுங்க..” : வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியது ஹூண்டாய்!

இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் சுமார் 1,55,622 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளில் சுமார் 59.7 சதவீத இறப்புகள் வாகனத்தை அதிக வேகமாக இயக்கியதால் நடந்த விபத்தாகும் எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது, இந்தியா முழுவதும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 17 விபத்து நடைபெறுவதாகவும் சில புள்ளி விவரங்கள் கூறுகிறது.

மேலும் சில சமயங்களில் பகலில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதால் விபத்து ஏற்படுவதாகவும் தெரிவித்திருக்கின்றன. மக்களுக்கு போக்குவரத்து தொடர்பான விதிகளை கடைபிடிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை கொண்டுவந்துள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் இருவருமே கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும். சாலைகளை 40 கி.மீ வேகத்திற்குள் மட்டுமே செல்லவேண்டும் உள்ளிட்ட பல விதிகளை அரசு கரராக கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கார் நிறுவனங்களில் முன்னணியில் உள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், அதிக கார்களை விற்பனை செய்து பட்டியலில் முன்னணியில் உள்ளது.

லாபம் மட்டுமே நோக்கமன்று, மக்கள் சேவையும் தங்களின் கடமை என எண்ணி, சாலை விதிகளைப் பின்பற்றுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கடந்த 6 ஆண்டுகளாக #BeTheBetterGuy ( Buckle up, Young India ) எனும் விழிப்புணர்வு பிரசாரத்தை ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் முன்னெடுத்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, இந்தாண்டுக்கான #BeTheBetterGuy விழிப்புணர்வு பிரசாரத்தை ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் மேற்கொண்டுள்ளது. அதன்படி, சாலைகளில் நடந்து செல்லும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும், வாகனங்களில் செல்வோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்தும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் வலியுறுத்தப்படுகிறது.

வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தாதீர்!

* வாகன ஓட்டிகள் எப்பொழுதும் வாகனங்களை சாலையின் இடது பக்கத்தில் இயக்கவேண்டும்.

* வாகனம் ஓட்டும்போது கட்டாயம் செல்போன் பேசக்கூடாது. இதனால் ஏற்படும் விபரீதம் உயிரை விலை கேட்கிறது. நம் உயிரை மட்டுமல்ல, சாலையில் செல்லும் பிறர் உயிரையும் காவு வாங்கிவிடும்.

* 18 வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்களை வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது.

* கனரக வாகனங்களில் டிரைவர் செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டும்போது விபத்து நேர்ந்தால், வாகனத்தில் பயணம் செய்வோரும் உயிரை விடும் நிலை ஏற்படும்.

பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சாலை விதிமுறைகளை பின்பற்றுவது நமக்கு மட்டுமல்லாது சாலையில் பயணம் செய்யும் அனைவருக்கும் நன்மை பயக்கும்.

ஹெல்மெட் அணிவது கட்டாயம்!

* இருசக்கர வாகன விபத்துகளில் சிக்குவோர் பெரும்பாலும் உயிரிழப்பதற்கு காரணம் அவர்கள் தலைக்கவசம் அணியாமல் இருப்பதுதான் என தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.

* மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம். ஹெல்மெட் கட்டாயம் என்பது தொடர்பாக உச்சநீதிமன்றம், அனைத்து உயர் நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

Also Read: #BeTheBetterGuy : சாலையில் செல்லும்போது செய்யவேண்டியது என்ன? விழிப்புணர்வை ஏற்படுத்திய ஹூண்டாய் நிறுவனம்!