India

ஒடிசா ரயில் விபத்து.. 2 மாதமாகியும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாத 29 பேரின் சடலங்கள்.. முழு விவரம் என்ன ?

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே 2-ம் தேதி இரவு நேரத்தில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு கிடந்த ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாயின.

தொடர்ந்து அடுத்தடுத்து 3 ரயில்கள் ஒரே நேரத்தில் விபத்தைச் சந்தித்ததால் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து நாட்டையை உலுக்கியுள்ளது. தற்போது வரை 275 பேர் உயிரிழந்துள்ளதாக ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது; மேலும் 1500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த கோர விபத்து இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதுமிலிருந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில், பின்னர் அவரை புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட டிரக்குகளில் வைத்து உற்வினர்கள் வந்தபின்னர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், பல உடல்களில் முகம் சிதைந்ததால் டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அப்படி இருந்தும் இன்னும் 29 பேரின் சடலங்கள் இன்னும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில், உடல்களை வாங்கத் தயாரில்லை என சில உறவினர்கள் அறிவித்ததாகவும், ஆனால் பிறர் இது குறித்து ஏதும் கூறாததால், 2 உடல்களை புவனேஸ்வர் மாநகராட்சி தகனம் செய்ததாகவும் கூறப்பட்டது. அதே நேரம், நாட்கணக்கில் யாரும் உரிமை கோராத நிலையில், அடுத்த கட்டம் குறித்து யோசித்து வருவதாக எய்ம்ஸ் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சிறுநீரை குடிக்க வைத்து கொடுமை.. சிறுவர்கள் ஆசனவாயில் மிளகாயை திணித்து கொடூரம்.. உ.பி-யில் அதிர்ச்சி !