India

3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயம்.. ஒன்றிய அரசு தகவலால் அதிர்ச்சி: பா.ஜ.க ஆளும் மாநிலம் முதலிடம்!

இந்தியாவில் 2019 முதல் 2021ம் வரையிலான மூன்று ஆண்டுகளில் 13 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் மாயமாகியுள்ளதாகக் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள தரவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில், 2019 முதல் 2021ம் வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் 18 வயதுக்கு மேற்பட்ட10,61,648 பெண்களும், அதற்கும் குறைவான வயதுடைய 2,51,430 பெண்களும் மாயமாகியுள்ளனர். இதில் 2021ம் ஆண்டுமட்டும் 3.75 லட்சம் பெண்கள் மாயமாகியுள்ளனர்.

இந்த மூன்று ஆண்டுகளில் பா.ஜ.க ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் 1,60,180 பெண்களும், 38,234 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். அதேபோல் மேற்கு வங்கத்தில் 1,56,905 பெண்களும் 36,606 சிறுமிகளும், மகாராஷ்டிராவில் 1,78,400 பெண்களும் 13,033 சிறுமிகளும் மாயமாகியுள்ளனர்.

அதேபோல் யூனியன் பிரதேசங்களில் டெல்லியில் 61,054 பெண்களும் 22,919 சிறுமிகளும், ஜம்மு காஷ்மீரில் 8,617 பெண்களும் 1,148 சிறுமிகளும் மாயமாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள இந்த தகவல் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Also Read: ”புல்வாமா போன்று நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதையும் செய்வார் பிரதமர் மோடி” : சத்யபால் மாலிக் எச்சரிக்கை!