India
இன்ஸ்டாவில் Reels செய்ததால் ஆத்திரம்.. செவிலியரை கட்டையால் அடித்தே கொன்ற கொடூர அண்ணன் !
தெலுங்கானா மாநிலம் வத்ராதேகொத்தகேல் என்ற பகுதியில் கொல்லம்பள்ளி என்ற கிராமம். இங்கு குடும்பத்துடன் வசித்து வந்தவர் அஜ்மீரா சிந்து (எ) சங்கவி. 21 வயது இளம்பெண்ணான இவர், மஹபூபாபாத் (Mahabubabad) மாவட்டத்தில் உதவி செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் மொபைல் போனில் அதிக நேரத்தை செலவழித்து வந்துள்ளார்.
இதனால் இவருக்கும், இவரது குடும்பத்தாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமின்றி இன்ஸ்டா உள்ளிட்டவைகளில் சங்கவி ரீல்ஸ் செய்து மகிழ்ந்துள்ளார். இது அவரது 22 வயது சகோதரர் ஹரிலாலுக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இதனால் சங்கவி மற்றும் ஹரிலாலுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் ரீல்ஸ் உள்ளிட்டவையை சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றக்கூடாது என்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதனை செவிமடுக்காத சங்கவி மீண்டும் ரீல்ஸ் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிலால், தனது தங்கையிடம் வாக்குவாதம் செய்துகொண்டிருக்கும்போதே கட்டையால் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த தங்கை சங்கவி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை கண்ட உறவினர்கள் உடனடியாக இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் உயிரிழந்து கிடந்த சங்கவியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்ததோடு, சகோதரன் ஹரிலாலையும் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரிக்கையில் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு வந்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘அன்புக்கரங்கள்' திட்டம் : கருணையின் முதல்வராகக் காட்சி தருகிறார் மு.க.ஸ்டாலின்... முரசொலி புகழாரம் !
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !